// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி MIET கல்லூரியில் நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் தலைப்பில் கருத்தரங்கம் - பேராசிரியர்கள் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி MIET கல்லூரியில் நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் தலைப்பில் கருத்தரங்கம் - பேராசிரியர்கள் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி குண்டூரில் உள்ள MIET  பொறியியல் கல்லூரியில் "தொழில் தயார்நிலை 2030 நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில்செயலாளர் மற்றும் தாளாளர் முகமது யூனுஸ் தலைமையில் மனிதவள மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜெகத் கஸ்பர் ராஜ், ஸ்பால் நிறுவனத்தின் மண்டல மனிதவள விற்பனை பங்குதாரர் முனைவர் ரத்தினவேல்ராஜன், கிஸ்லென் நிறுவனத்தின் தலைமை மனிதவளப்பிரிவு சாஜ், டான்கேம் துணைத் தலைவர் தென்றல்ராஜேந்திரன், UNO மின்டா  நிறுவனத்தின் மண்டல தலைமை மனிதவளப்பிரிவு சந்திரமோகன், வெர்னெட் டெக்னாலஜி பூனா மற்றும் சென்னை பிரிவின் தலைமை மனிதவள மற்றும் இயக்கம் ஜூலிகிருபாவதி, டோஸ்ட் மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் பி 4 இயக்குனர் அருள்மொழிவில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால நோக்கம், செயல்பாடுகள் குறித்து கருத்துரையை வழங்கினர்.

இந்நிகழ்வில் முதல்வர் நவீன்சேட், துணை முதல்வர் முகமது அப்துல் ஜலில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments