// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** மாநகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவோம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு.

மாநகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவோம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு.

மாநகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவோம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிக்கை வெளியீட்டுள்ளார்.

மக்கள் விரோத மாநகராட்சி நிர்வாகமே மக்களின் உயிர் என்றால் அலட்சியமா? வரி வசூலிப்பதில் காட்டும் நெருக்கடிகளை மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி அதிகாரிகளின் மீது காட்ட வேண்டாமா?மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மரண பள்ளங்கள்!தினம் தினம் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே விழுந்து கை கால்கள் உடைந்து செல்லும் பரிதாப அவலங்கள். 

ஒரு வார மலைக்கு தாக்கு பிடிக்காத சாலைகள் அதிலும் பாதி சாலைகள் ஓட்டு சாலைகள் சரி அந்த ஒட்டுசாலைகளை யாவது ஒழுங்காக பராமரிக்க வேண்டாமா?

இன்னமும் ஒரு வார காலத்தில் போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் சரி செய்யாவிட்டால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி மாபெரும் முற்றுகைப் போராட்டம்  நடத்தப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments