திருச்சியில்தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வழங்கினார் ..!
திருச்சி தென்னூரில் மாநகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி கொண்டாடும் தூய்மை பணியாளர்களுக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் தலைமையில் புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் இதில் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளையும் இனிப்புகளையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான தஞ்சை அகமது கபீர் , மாநில துணைச் செயலாளர் ஆத்தூர் ரஹிமான், இளைஞர் அணி பொருளாளர் இம்ரான் , ஆகியோரும் பங்கேற்றனர் .
மாவட்ட துணை செயலாளர் தர்வேஸ், புருணை மண்டல துணைச் செயலாளர் யாக்கூப், தலைமை செயற்குழு உறுப்பினர் சிராஜுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதாம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பஷாரத் மேலும் ஆழ்வார்தோப்பு கிளை நிர்வாகிகள் மற்றும் ரெஜிமென்ட் பஜார் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
0 Comments