திருச்சி மத்திய சிறையில் ஜாதிய வன்மத்தோடு அதிகாரிகள் நடந்து கொள்வதாக முக்குலத்து புலிகள் கட்சி புகார்......
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரவண தேவர் திருச்சி மத்திய ஜெயில் முன்பு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது ;-
திருச்சி மத்திய ஜெயிலில் கடந்த 2 மாதமாக ஜெயிலில் இருக்கும் ஒரு உயர் அதிகாரி ஜாதிய வன்மத்துடன் நடந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்தன....
இன்று எங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒரு கைதியை மனு போட்டு ஜெயிலில் பார்த்துவிட்டு வந்தோம். சமீபத்தில் சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி ஜெயிலுக்கு மாற்றப்பட்ட எனது உறவினர் ஒருவரை ஜெயிலில் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து அவரது மனைவி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். ஜாதிய பிரச்சனை இருப்பதை ஜெயிலுக்குள் இருக்கும் கைதிகளும் உறுதிப்படுத்தினர்......குறிப்பிட்ட சில சாதிகளை சேர்ந்த கைதிகளை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்துவது தொடர்கிறது. அதுமட்டுமில்லாமல் கைதிகளுக்கு இடையே ஜாதி பூசலை உருவாக்குகிறார்கள். பின்னர் தமக்கு வேண்டப்படாத கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது....ஆகவே உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த ஜெயிலில் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட ஜெயில் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் முக்குலத்து புலிகள் கட்சி சார்பில் மத்திய ஜெயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது அக்கட்சியின் மண்டலச் செயலாளர் அன்பு ரமேஷ் தேவர் ,மாணவர் அணி துணைச் செயலாளர் வினோத் ,சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0 Comments