BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** வீடு கட்டுவோருக்கான விழிப்புணர்வு கண்காட்சி

வீடு கட்டுவோருக்கான விழிப்புணர்வு கண்காட்சி

அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் மற்றும் எம்.ஏ எம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய வீடு கட்டுவோருக்கான விழிப்புணர்வு கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

எம்.ஏ.எம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் இணைந்து நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான மாபெரும் கட்டுமான கண்காட்சி திருச்சி குண்டூர் அருகே உள்ள அல்ட்ராடெக் பிளான்டில் இன்று நடைபெற்றது. "வீடு கட்டுவோருக்கான கண்காட்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் உபதலைவர் ராஜா, தலைமை ஆர்கிடெக்ட் ரமணன், அல்ட்ராடெக் மூத்த மேலாளர் ஜோய்ஸ் வர்கீஸ்,

எம்.ஏ.எம் கல்லூரி முதல்வர் முனைவர் சூசன் கிறிஸ்டினா, மற்றும் எம்ஏஎம் கல்லூரியின் கட்டிடவியல் துறை தலைவர் சசிகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

கட்டுமான துறையில் உள்ள பல்வேறு துறைகளான சிமெண்ட், செங்கல், நீர் சுத்திகரிப்பு, எம்சாண்ட் போன்றவற்றில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அதற்குரிய பரிசோதனைகளை செய்து தருவதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. 




மேலும் ஸ்மார்ட் சிட்டி, கிரீன் பில்டிங், ஸ்மார்ட் பில்டிங், மாடுலர் ஹோம் உள்ளிட்ட 16 வகையான ஸ்டால்கள் எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  பார்வையிட்டு சென்றனர்.


Post a Comment

0 Comments