திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் பாலக்கரையில் உள்ள தமஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீலூர் ரகுமான் மாவட்ட துணை செயலாளர்கள் முகமது தாஹா.கம்பரசம்பேட்டை காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
வருகின்ற ஜனவரி 28 அன்று பழனி ஆயக்குடி நடைபெறும் புரட்சியாளர் பழனி பாபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து அதிகமான அளவில் மக்களை அழைத்துச் செல்வது.
பழனி பாபா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தலைமையிடம் கோரிக்கை வைத்து விரைவாக புரட்சியாளர் பழனிபாபா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை துவங்குவதற்கு வலியுறுத்துவது
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளில் கட்சியின் சார்பாக போட்டியிடுவது அதற்கான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை விரைவாக செய்வது.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 Comments