NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தரை கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

தரை கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

 தரை கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்....

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் அளித்த மனுவில்.., 

கடந்த 2.4.2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள அரியமங்கலம் SIT முன்பு உள்ள பகுதியில் அரசுக்கு சொந்தமான ரோட்டோர இடத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அங்கு உள்ள தள்ளு வண்டி நடைபாதை வியாபாரிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை எஸ்.ஐ.டி நிறுவனத்திற்கு அரசு தாரைவார்த்து உள்ளது. மேற்படி நிறுவனம் அந்த இடத்தை எதற்கும் பயன் படுத்தா வண்ணம் வேலி போட்டு அடைத்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எடுத்து எஸ்ஐடி என்ற தனியார் அமைப்பிடம் கொடுத்ததை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் மேலும் அந்த இடத்தில் பழையபடி தரைக்கடை வியாபாரிகள் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதித்து அவர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments