சமீபத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை அதிக அளவு விலை உயர்வை அடுத்து தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.....
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் SDTU கட்சியின் தொழிற் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராத்திரி சந்தித்து மனு அளித்தனர்....

தற்போதைய சூழலில் பெட்ரோல் 111 ரூபாயும் , டீசல் 103 ரூபாயும் விற்பனையாகின்றது......
மேலும், வாகன இன்சூரன்ஸ் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் வாகன புதுப்பித்தல் கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது ஆட்டோக்கள் இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அரசு மினிமம் 40 ரூபாயும் கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும் நிர்ணயித்து கொடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments