பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் திறந்து கண்டன போராட்டம் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.....
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட மக்கள் உரிமை கூட்டணி அமைப்பினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நிறுவன செயலாளர் வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் உயர்வை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜென்டாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி கமலக்கண்ணன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் ரவிக்குமார், ரெட் பிளாக் கட்சியின் மாவட்ட நிர்வாகி ராமலிங்கம், சமூக நலக் கூட்டமைப்பின் மாநில நிர்வாகி சம்சுதீன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 Comments