தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் அருண்கோபால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக செயலாளர் பொன்இளங்கோ, பொருளாளர் சேத்தனர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.....இதில் தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அருண்கோபால் சமீபத்தில் சமூக வலைத்தல் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருவள்ளுவரே திருடன் தான் என்ற தொனியில் அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.....
தமிழக அரசு அறிவித்துள்ள அட்டவணையில் இன பிரிவின் வரிசை அடிப்படையில் திருவள்ளுவர் என்ற வரிசையில் வள்ளுவன் என்ற பதிவு உள்ளது எனவே திருவள்ளுவர், வள்ளுவன் என்ற இரண்டு பேரும் பொதுப்பெயராக இணைத்து வள்ளுவர் என்று தனியாக அடையாளப்படுத்தி அதன் கீழ் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் மேலும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை வழங்கும் வகையில் 3 சதவீத தனி சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் மேலும் திருவள்ளுவர் இன மக்கள் மத்திய அரசின் ஓபிசி பிரிவில் இடம்பெற்ற சலுகைகளைப் பெற்று வருகின்றனர்....


0 Comments