BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி அரசு பள்ளியில் +1,+2 வகுப்புக்கு ஆங்கில வழி கல்வி கொண்டு வர திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி அரசு பள்ளியில் +1,+2 வகுப்புக்கு ஆங்கில வழி கல்வி கொண்டு வர திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம் காட்டூர்  பாப்பா குறிச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014 ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வியும் கொண்டு வரப்பட்டு இரண்டு பிரிவாக  மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு  ஆங்கில வழிக்கல்வி முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டனர் .இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு  ஆங்கில வழிக்கல்வி அனுமதியை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்து செய்துவிட்டார்....இதனால் மாணவிகள் 10 ஆம் வகுப்புக்கு மேல் தங்களது ஆங்கில வழிக்கல்வியை   +1 மற்றும் +2 மாணவிகள் தொடர முடியாமல்  தவிக்கின்றனர்.

   


 
இது  சம்மந்தமாக பள்ளித் தலைமையாசிரியரிடம் கேட்டபோது போதிய ஆசிரியர் இல்லாத காரணத்தால் நாங்கள் தொடர்ந்து +1 மற்றும் +2 ஆங்கிலக் கல்வியை நடத்த இயலவில்லை என்று கூறினார்.மேலும் இது சம்பந்தமாக கடந்த 13_11_2021அன்று திருச்சி வந்த முதல்வர் அவர்களிடம் இது சம்பந்தமாக மனு கொடுக்கப்பட்டது..எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை இல்லை.

எனவே வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்த அரசு  பள்ளியில்  +1 மற்றும் +2  ஆங்கிலக் கல்வியைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாணவிகளின் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டுமாய் மாணவிகள் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் WIM திருச்சி மாவட்ட தலைவர்  மூமினா பேகம்,WIM மாநில பேச்சாளர் மெஹ்ராஜ்  பானு,  SDPI  கட்சி சுற்றுசூழல் அணி திருச்சி மாவட்ட தலைவர்  ரஹ்மதுல்லா, திருவரம்பூர் தொகுதி துணை தலைவர் அப்பாஸ் மந்திரி   ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments