NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை - ரூபாய் 3 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை - ரூபாய் 3 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று  திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மேலாளர் கம்பன் ஆகியோரிடம் கணக்கில் இல்லாமல் இருந்து ரூபாய் 3 லட்சம் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேலாளர் ரவீந்திரனுக்கு சொந்தமான உறையூர் மற்றும் காட்டுரில் உள்ள வீடுகளிலும் மற்றும் உதவி மேலாளர் கம்பன்  வீடுகளிலும்

தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments