NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** பொது மக்களுக்கு பயன்படாமல் இருக்கும் சுரங்கபாதையை சீரமைக்க கோரி சமூக நீதி பேரவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொது மக்களுக்கு பயன்படாமல் இருக்கும் சுரங்கபாதையை சீரமைக்க கோரி சமூக நீதி பேரவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 திருச்சி லால்குடியில் பொதுமக்களுக்கு பயன்படாமல் இருக்கும் சுரங்கப் பாதையை சீரமைக்க கோரி ; சமூக நீதி பேரவை  ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சமூகநீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது..,

திருச்சி மாவட்டம், லால்குடி ரயில்வே மேம்பாலம் கீழ் பொதுமக்கள் செல்வதற்காக சுரங்கப்பாதை ரயில்வே நிர்வாகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே பாலத்தை கடந்து செல்ல சிரமமாக இருந்த காரணத்தினாலும் விபத்து அடிக்கடி ஏற்பட்ட காரணத்தினாலும் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.


சுரங்கப் பாதையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாத வகையில் உள்ளது. மேலும் சுரங்கப்பாதை  சாராயம் குடிப்பதற்கு உகந்த வகையில் உள்ளதால் குடிகாரர்கள் தினமும் சாராயம் குடிக்க பயன்படுத்துகின்றனர். இது சுரங்கப்பாதை அருகில் உள்ள லால்குடி நகராட்சிக்கு இது நன்றாக தெரியும் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 5 ஆண்டுகளாக இதே நிலைமையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மனித உயிர்களை காக்கும் வகையில் தண்ணீர் தேங்காமல் சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனால் பொதுமக்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments