// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி தில்லைநகரில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு காபி கடையில் தீ விபத்து

திருச்சி தில்லைநகரில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு காபி கடையில் தீ விபத்து

திருச்சி தில்லைநகர்  சாலை ரோடு ஜெயந்தி பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே கும்பகோணம் ஐங்கரன் காபி கடை உள்ளது. இன்று மாலை திடீரென காபி கடையில் பயன்படுத்திய சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. 

லேசாக பற்றிய தீ மளமளவென கடை முன் பகுதியில் எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

Post a Comment

0 Comments