// NEWS UPDATE *** ”இந்த கூட்டணிய நல்லபடியா நடத்தணும்... சிறு,சிறு பூசல்களை தவிர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” - நிர்மலா சீதாராமன் ***** விரைவில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் த.வெ.க தலைவர் விஜய்.! *** திருச்சியில் லாட்டரி விற்றவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.ன

திருச்சியில் லாட்டரி விற்றவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.ன

திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் அருகே லாட்டரி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி விற்றதாக காந்தி மார்க்கெட் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவச்சந்திரன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றதற்கான ஆவணங்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதேபோல் திருச்சி பாலக்கரை முறுக்குகார தெரு பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக அருண் குமார் (வயது 29) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.


திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து பணம் , ஏடிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments