BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** மரம்-மழை-மகிழ்ச்சி மாநாடு தீர்மானங்கள்

மரம்-மழை-மகிழ்ச்சி மாநாடு தீர்மானங்கள்

 மர ஆர்வலர்களின் மரம் மழை மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பசுமை சிகரம் கட்டளை விதைகள் யோகநாதன் தலைமை தாங்கினார். ..

தண்ணீர்  கே.சி. நீலமேகம் , உறுதி மொழி வாசித்தார் ...மாநாடு ஒருங்கிணைப்பாளர் மரம் தாமஸ் வந்தவர்களை வரவேற்றார்.

முதல் நாளான இன்று சாலையோர மரங்கள் வளர்ப்பு மக்களின் பங்கு அரிய வகை மரங்கள் மீட்டெடுப்பு காடுகள் மறுஉருவாக்கம் குறித்த தலைப்புகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும்  சிறப்புரையாற்றினர்கள்

அதன்பின் மரங்களும் மனிதர்களும் எவ்வளவு வாழ்க்கையில் ஒன்றிப்போய் வாழ்ந்து வருவதை சத்தீஸ்கர் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் மருத்துவர் பிரசன்னா ஐ.ஏ.எஸ் விளக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர்..அழியும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களை தேடி கண்டுபிடித்து அதை அடுத்த தலைமுறைக்கும் அந்த மரங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம்,மனித பரிணாம வளர்ச்சிக்கு முன்பே தோன்றியது மரங்கள்! எல்லா வகையிலும் மரங்கள் நமக்கு உதவுகிறது. ஆனால் நாம் அவற்றை அப்படியே வளரச் செய்வதே அவற்றிற்கு நாம் செய்யும் உதவி என்றார். 

உணவு உடை இவையிரண்டும் இன்றியமையாதவை ஆதிகாலத்தில் இருந்து மரங்கள் இவை இரண்டிற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது ஒவ்வொரு நோய்க்கும் மருந்து ஒவ்வொரு மரத்திலிருந்தும் கிடைத்தது

பறவைகள், மாடுகள் ஆடுகள் உண்ணும் மரப் பட்டைகளில் இருந்தாலும் ஒவ்வொரு

மருந்துகளள கண்டறிந்து பல நோய்களுக்கு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என குறிப்பிட்டார். ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு ஒரு வகையில் ஒரு உதவியா தான் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக பலா மரத்தை எடுத்துக்கொண்டால் இரட்டைவால் குருவி மட்டுமே கூடு கட்டும் பருந்துடன் சண்டையிடும் என்பதால் அதனை சுற்றி 40 குருவிகள் இருக்கும். உயிர்காக்கும் மரமாகவே வன்னிமரம் இருக்கின்றது. மகாபாரதத்தில் வனவாசம் செல்லும் பொழுது  வருடம் அந்ஞாதலாசம் செல்லும் பொழுது ஆயுதங்களை வன்னி மரத்தடியிலேயே வைத்து சென்றனர்.

திரும்பி வரும்பொழுது ஆயுதங்கள்


அப்படியே இருக்கும் என்பதற்காகவே

அவ்வாறு செய்தனர். அப்படி ஒரு புகழ்பெற்றது வன்னி மரம்! இந்த மரம் வளர்வதற்கு 25 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமுறையில் ஒரு மரத்தை வெட்டினால் அடுத்த தலைமுறை இந்த மரத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதால் ஒரு சமூகத்தினர் இதனை பாதுகாத்து வருகின்றனர். இலுப்பை மரம் ஒரு கோவிலை கட்ட தொடங்கும் போது மரத்தை வளர்க்க தொடங்குவர் கோயில் கட்டி முடித்த பின்னர் இலுப்பை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மூலம் கோயிலுக்கு விளக்கேற்றுவர் என தெரிவித்தார்

இப்படி ஒவ்வொரு மரத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது வரலாற்றை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது என்பது அவசியமாகும் இன்றைக்கும் பல ஊர்களின் பெயர்கள் நாம் அறிந்திருக்கிறோம் அப்படி


ஒவ்வொரு மரங்களின் தன்மையையும் மரங்களின் பெயர்களை நாம் மறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது இவற்றையெல்லாம். காக்க வேண்டியது நம் ஒவ்வொரு உருடைய கடமையாகும் என மரம் மனிதவளத்தை பாதுகாத்து வருவதை அழுத்தமாக பேசினார்.


 இந்த இரண்டு நாள் மாநில மாநாட்டை மரம் தாமஸ் ,  பசுமை சிகரம் அறக்கட்டளை யோகநாதன், தண்ணீர் அமைப்பு கே.சி. நீலமேகம், GKV ராஜு ஏற்பாடு

செய்திருந்தார்.


முன்னதாக மரம் வளர்ப்பு குறித்த

உறுதிமொழி எடுக்கப்பட்டது.


 இம்மாநாட்டில் தண்ணீர் அமைப்பு நீலமேகம், ஆர் கே. ராஜா.  கிருஷ்ண லாயா GKV ராஜு உள்ளிட்டோரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  ஒசை காளிதாசன் மற்றும் பனானா லீஃப் உணவகம் உரிமையாளர் மனோகரன், கோபால்தாஸ் ஜூய்வல்லர்ஸ் தில்ஜித் ஷா, பத்மஸ்ரீ கிராமலாயா தாமோதரன் , உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.


மரம் - மழை மகிழ்ச்சி மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் தண்ணீர் அமைப்பு "தண்ணீர் " கே.சி நீலமேகம் தலைமையில் நடந்தது.


சாலை ஒர மரங்களை பற்றி நெடுஞ்சாலைத்துறை, கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா . கிருஷ்ணசாமி பேசினார்.


மரம் வளர்ப்பது விவசாயிகளின் அனுபவ பகிர்வு தலைமை, துறையூர் ஏரக்குடி ஆர்.மனோகரன், பற்றி பேசினார்.


1.பயன்கள் தரும் மரங்கள்


2, மரங்கள் தரும் பயன்கள்


3. அரிய வகை மரங்கள் மீட்டெடுப்பு என

குழு அமைத்து மாநில முழுவதும் ஒருங்கிணைத்து  செய்யபடுத்த குழுக்கள் அமைக்கப்பட்டது.


நிகழ்வில் கிருஷ்ணலாயா ஸ்ரீரங்கம் G. K.V. ராஜு , முகிலன், தெய்வகுமார் , பாலகிருஷ்ணன் , நாகேந்திரன், மக்கள் சக்தி இயக்க வெ.ரா.சந்திரசேகர், 


மாநாட்டு தீர்மானங்களை தண்ணீர் அமைப்பு ஆர்.கே.ராஜா வாசித்தார்.


தீர்மானங்கள்


1. மனிதனை காப்பாற்ற Red Cross, விலங்குகளை காப்பாற்ற Blue Cross இருப்பது போன்று "மரங்களை வெட்டாமல் காப்பாற்ற Brown Cross" என்ற அதிகாரம் உள்ள அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இந்த Brown Cross சுதந்திரமான மரங்களை காப்பாற்ற முயலும் நல்ல உள்ளங்களை கொண்டு, மாவட்ட, வட்ட, கிராம அளவில் ஏற்படுத்தி தமிழக அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.


2. புதிய மரங்களை நட்டு வளர்க்க


1) பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு மரம் நட்டு அதை வளர்த்தெடுக்க மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒரு மரம், அதற்குரிய மதிப்பெண்கள் என்று இருந்தால் அதிக மரங்கள் வளர்க்க முடியும்.


2) தமிழக, மத்திய தனியார் அலுவலகங்களில் உள்ள காலியான இடங்களில்  மரங்களை நட்டு வளர்க்க சட்டம் இயற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது .


3) மத்திய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை நட்டு பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்.  வெட்டும் மரங்களுக்கு பதில் பத்து மரங்களை ஏற்கனவே நட்டு வளர்த்து இருக்க வேண்டும்.


4)  ஏற்கனவே மரம் வளர்த்து காப்பாற்றுவர்களுக்கு வீட்டு வரியில், மர எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி வரி குறைப்பு சலுகை தரப்பட வேண்டும்.


3. அரிய வகை மரங்களை காப்பாற்ற


1) தமிழகத்தை தாயகமாகக் கொண்ட, தாயகமாக ஏற்றுக் கொண்ட அழிந்து போன, அழியும் நிலையில் உள்ள மரங்களை காப்பாற்ற தமிழக அளவில் ஒரு நிபுணர் குழு ஏற்படுத்தி அரிய வகை மரங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழக அரசுக்கு வேண்டுகோள் இம்மாநாடு விடுகிறது.


2) இராமநாதபுரம், பரமக்குடி வனங்கள் சரணாலயம், தஞ்சாவூர், வல்லம் மரங்கள் சரணாலயம் விருட்ச வனம், Trees Trust Trichy மாதிரி - அரிய மரங்களின் தொகுப்பை எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்தி அதை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.


3) அரிய மரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை தமிழக வன இலாகா எந்தந்த பகுதிகளில் என்னென்ன மரங்கள் உள்ளன, அவைகளை பெருக்க எடுத்த வழிமுறைகள், போன்றவற்றை ஆவணப்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


4) மரம் வெட்டுவதை புகார் தெரிவிக்க ஒரு அலைபேசி எண் அல்லது Toll Free Number தமிழக அரசு ஏற்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும்.


5) மரங்களில் விளம்பர பலகை வைக்க ஆணிகள் அடிப்பது, மரங்களுக்கு ஆசிட் ஊற்றி கொள்வது, மரங்களுக்கு அடியில் குப்பைகளை போட்டு எரித்து மரங்களை சாகடிப்பது போன்ற தீய செயல்களை தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டும்.


Trees Trust மேலாண் இயக்குனர் மரம் P.தாமஸ் நன்றியுரை கூறினார்.

Post a Comment

0 Comments