BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மரம்- மழை- மகிழ்ச்சி 2 நாட்கள் மாநாடு

மரம்- மழை- மகிழ்ச்சி 2 நாட்கள் மாநாடு

 தமிழகம் முழுவதும் மரம் நடும் அமைப்புகளை ஒன்றிணைக்கவும் மர ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் வகையில் திருச்சியில் இன்று  21 ஆம் தேதி  மற்றும் நாளை  22  ஆம் தேதி ஆகிய தேதிகளில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு கருத்தரங்கு நடைபெறுகிறது. மரங்கள் அறக்கட்டளை, விதைகள் அமைப்பு, தண்ணீர் அமைப்பு ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன.

தமிழகத்தில் அழிந்து வரும் இனங்களையும் மீட்கவும், அதிக மரங்களை வளர்க்க திட்டமிடவும், மாநில அளவில் மரங்களை பாதுகாக்க மரம் வெட்டுவதை தடுக்கவும், மாநில அளவில் மரங்களை பாதுகாப்பு இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவே இந்த மாநில மாநாட்டை நடத்த முடிவு எடுத்துள்ளோம் அழியும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களை தேடி கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு அந்த மரங்களை கொண்டு செல்ல குழுவாக செயல்பட உள்ளோம்....

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப் படுத்தி உறுதியான இயக்கமாக மாற்ற ஆர்வலர்களும் இந்த மாநில மாநாடு பேருதவியாக அமையும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஆனது மரம்-மழை- மகிழ்ச்சி என்ற தலைப்பில் வரும் இன்று மற்றும் நாளை  ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்று வருகிறது...

Post a Comment

0 Comments