NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி பிரம்ம குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா - கூடுதல் காவல் துணை ஆணையர் பங்கேற்பு

திருச்சி பிரம்ம குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா - கூடுதல் காவல் துணை ஆணையர் பங்கேற்பு

இந்திய சுதந்திர பவளவிழா மற்றும் திருச்சி பிரம்மா குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா திருச்சி உறையூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் துணை ஆணையர் வனிதா, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன், முன்னாள் மேயர் சுஜாதா, கோட்ட தலைவர் விஜயலட்சுமி, திருச்சி மாவட்ட பிரம்ம குமாரிகள் இயக்குனர் இராஜயோகினி மல்லிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்...




 முன்னதாக பிரம்ம குமாரி விஜயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பிரம்ம குமாரி அனுசுயா தியான அனுபவம் செய்வித்தார். ஆடிட்டர் பிரம்ம குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments