// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ராஜீவ் காந்தி உருவ சிலை காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

ராஜீவ் காந்தி உருவ சிலை காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து  திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு  காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 




அதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை காங்கிரஸார் ஏற்று கொண்டனர். தொடர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்  மாமன்ற உறுப்பினர்கள் சுஜாதா, ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் , மகிளா காங்கிரஸ்,  வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments