NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி அருகே விபத்தில் மரணமடைந்தவரை பார்க்க வந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு

திருச்சி அருகே விபத்தில் மரணமடைந்தவரை பார்க்க வந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பனையபுரம் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது.இதில் கும்பகோணம் அண்ணாநகர்  சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33) கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்..

சத்யானந்தம் திருச்சி அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்... இந்த நிலையில் உயிரிழந்த சூர்யா படுகாயமடைந்த சத்யானந்தத்தை பார்க்க சூர்யாவின் தம்பி திருச்சி மருங்காபுரி அருகே தொட்டியப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் அவரது மனைவி கிருத்திகா (21) ஆகியோர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது சூர்யா உடலை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கிருத்திகா உயிரிழந்தார். இறக்கும் போது கிருத்திகா 9 மாதம் நிறைமாத கர்ப்பிணி பெண் என குறிப்படத்தக்கது...

Post a Comment

0 Comments