NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாழை விவசாயிகள் கோரிக்கை...

உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாழை விவசாயிகள் கோரிக்கை...

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்குள் கிளை வாய்க்கால் தூர் வாரவும் அரசுக்கு கோரிக்கை...ஸ்ரீரங்கம் பகுதி வாழை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று திருச்சி நீர்வளத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வயலூர், சோமரசம்பேட்டை,எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்து வருவதாகவும், தற்போது உய்யக்கொண்டான் வாய்க்கால் குடிமாராமத்து பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுப்பணித் துறை நிர்வாகம் கடந்த 20 நாட்களாக தண்ணீரை நிறுத்திவிட்டது.

 இதனால் தற்போது வாழை சாகுபடி அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தண்ணீரை நிறுத்தி விட்டதால் பல ஆயிரம் ஏக்கர் வாழை சாகுபடி நிலங்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை  ஏற்பட்டுள்ளதாகவும்,


மேலும் அடுத்த வருடம் வாழை சாகுபடி செய்ய வாழை கன்றும் காய்ந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


இதனால் உடனடியாக குடிமராமத்து பணியை விரைவாக போர்க்கால அடிப்படையில் முடித்து,  தங்களுக்கு உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 அதுமட்டுமில்லாமல் பல பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாராமல் உள்ளது. இதனால் அடுத்த மாதம் காவிரி ஆற்றில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால்,  திருச்சி மாவட்டத்தில் பல வாய்க்கால்களில் தண்ணீர் வராத சூழ்நிலை உள்ளது.

ஆகையால் உடனடியாக தூர்வாரும் பணியை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments