திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பனையபுரம் அருகே கல்லணை சாலை பனையபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது..இந்த பகுதியில் வேகத்தடை மற்றும் இரும்பு பேரிகார்டு அமைக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்..
ஸ்ரீரங்கம் பனையபுரம் அருகே பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.. வட நாட்டு தொழிலாளி அதில் வேலை பார்த்துவிட்டு சாலையை கடக்க முயன்ற போது கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியதில் வடநாட்டு தொழிலாளி கீழே விழுந்து பலத்த காயம் அடைத்தார்.. அவரை பனையபுரம் கிராம மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 7 ஆம் தேதி இரவு மினி லாரி மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்...இது போன்ற விபத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வேகத்தடை மற்றும் இரும்பு பேரிகார்டு அமைக்க கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பனையபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் பேரிகார்டு அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்...இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
0 Comments