NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் “அரபு இலக்கியத்தின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள்” என்ற தலைப்பில் 2-நாள் சர்வதேச கருத்தரங்கம்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் “அரபு இலக்கியத்தின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள்” என்ற தலைப்பில் 2-நாள் சர்வதேச கருத்தரங்கம்

 திருச்சி ஜமால் முகமது கல்லூரி அரபு முதுகலை மற்றும் ஆய்வுத் துறை சார்பில் “வளைகுடா நாடுகளில் அரபு இலக்கியத்தின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள்” என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இந்த கருத்தரங்கில் அரபு துறைத்தலைவர் முனைவர் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முஹைதீன் தலைமை உரையாற்றினார்....


சிறப்பு அழைப்பாளர்களாக ஏமன் நாட்டின் அல்-ஹதீதா பல்கலைக்கழகம் பேராசிரியர். பஸ்ஸாம் அகமது அல்-கெளஃபூரி கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றினார். அதில் இதுவரை அரபுலகம் கண்டிராத எண்ணற்ற இலக்கிய படைப்புகள் வெளி வந்துள்ளது என்பதையும் அரபு மொழி பற்றிய சில குறிப்பிட்ட தன்மைகளையும் அது கடந்து வந்த பாதையையும் குறிப்பிட்டுப் பேசினார். இதேபோல் சவுதி அரேபியா நாட்டின் அரபு எழுத்தாளர் மற்றும் நாடக கதை ஆசிரியரும், கைஃப் கூட்டுறவு சங்க தலைவருமான யாசர் பின் யஹ்யா அல்-மத்களி கருத்துரை வழங்கினார்....

அரபு முதுகலை மற்றும் ஆய்வு துறை பேராசிரியர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த கருத்தரங்கில் 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டு அதில் 50க்கும் மேற்பட்ட ஆர்வத்தை சார்ந்த ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்



Post a Comment

0 Comments