NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மக்கள் அதிகாரம் அறிவிப்பு

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மக்கள் அதிகாரம் அறிவிப்பு

 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர்  ராஜூ திருச்சியில்  பேட்டி.மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது...செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்..,



தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே 17 தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டமும், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல் மதவிவகாரம் அல்ல எனவே பல்லாக்கு நிகழ்வை உடனே தடை செய்ய வேண்டும் என மே 22 தேதி மயிலாடுதுறையில் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments