திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெரு அருகே கஞ்சா விற்கப்படுவதாக முசிறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன் மனைவி விஜயகுமாரி (55) முவானூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசோழன் மகன் சுபாஷ் (19) மன்னச்சநல்லூர் அருகிலுள்ள குருவம்பட்டி சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் (19) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 800 கிராம் எடை கொண்ட கஞ்சா பொருட்களை கைப்பற்றினர்.
மேலும் தப்பியோடிய முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன் மகன் சஞ்சய் (23) மற்றும் கர்ணா மகன் வசந்த் (21) ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0 Comments