// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

கல்வி,விவசாயம்,மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது முழுமையாக விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்து தரப்படும்.



தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் மீது முழுமையாக கவனம் செலுத்தி மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக இந்த திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் பெறுவதற்கு வழிவகை செய்வேன்.


மாவட்டத்தில் குடிநீர்,சாலை வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கூடுதல் நேரத்தை அதற்காக செலவிடுவேன்.


பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் பெறுவதில் பல மாவட்டத்தில் சுணக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது - இந்த இரண்டு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார், எனவே இதன் மீது முழுமையாக கவனம் செலுத்துவோம்.

Post a Comment

0 Comments