NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மதுரம் மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகள் தொடக்கம்.

திருச்சி மதுரம் மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகள் தொடக்கம்.

திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிர்புறம் மதுரம் மருத்துவமனை அமைந்துள்ளது.145 வருடங்களுக்கும் மேலாக ஐந்து தலைமுறைகளாக மருத்துவ சேவை செய்துவரும் மதுரம் மருத்துவமனை புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது.


இம்மருத்துவமனையில் புதிய மருத்துவ பிரிவுகள் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மதுரம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஐவன் மதுரம் தலைமை தாங்கினார்.டாக்டர் ஷர்மிலி மதுரம் முன்னிலை வகித்தார்...


இதில் ஹைதராபாத் இந்திய மிஷன்ஸ் அசோசியேசன் பொதுச் செயலாளர் ஆயர் ஐசக் சௌந்தரராஜன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் கே.சுசில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை மையம், பல் சிகிச்சை மையம், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய புதிய பிரிவுகளை தொடங்கி வைத்தனர்.

விழாவில் மதுரம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரம் மருத்துவமனையில் 50 படுக்கை வசதி, 24 மணி நேரமும் செயல்படும் தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவு,மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், பாத பராமரிப்பு மையம், ஸ்கேன், எக்கோ, பிசியோதெரபி என அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளதாக டாக்டர் ஐவன் மதுரம் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments