திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற கோரிக்கையோடு இபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சினைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளரும் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் ஏற்பாட்டில் அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற பாலக்கரை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருச்சியில் மாநகர மாவட்ட செயலாளராக வெல்லமண்டி நடராஜன் இருந்து வருகிற நிலையில் எடப்பாடி ஆதரவாளரான மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் அனைத்து அணியினை சேர்ந்த கட்சியினரை சந்தித்து வருவது திருச்சி மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
0 Comments