NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சமூக செயற்பாட்டாளர் கைது செய்ததை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளர் கைது செய்ததை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா,முன்னாள் காவல் துறை டிஜிபி ஶ்ரீகுமார், பத்திரிக்கையாளர் ஜூபைர் ஆகிய சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்த பா.ஜ.க. அரசை  கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரிஅவர்கள்  தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்விற்கு திருவரம்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்புரையாற்றி முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம். அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி  அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.



மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் மசூதா மரியம், விம் மாவட்ட தலைவர் மூமினா பேகம்,திருவரம்பூர் தொகுதி செயலாளர் இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் சதாம் உசேன் ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.


தெற்கு மாவட்ட செயலாளர் மதர்  ஜமால் முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

தில் மாவட்ட, தொகுதி,அணி நிர்வாகிகள்,பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

இறுதியாக திருவரம்பூர்  தொகுதியின் செயலாளர் கைருதீன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

Post a Comment

0 Comments