BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

திருச்சி அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் நிரம்பி இருந்தது. கோடை முடியும் தருவாயில் ஏரியிலிருந்து தண்ணீரும் வற்ற தொடங்கியுள்ளது.


இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி மீன் திருவிழா மீன்பிடி திருவிழாவை நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து ஏரியில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கு மீன் பிடிப்பதற்காக ஊராட்சி தலைவர் சைகை காட்டினார். 


அதனை தொடர்ந்து கரையில் நின்றிருந்த பொதுமகள் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரில் பாய்ந்து தங்களிடமிருந்த மீன்பிடி வலை, கூடைகள், வேஷ்டிகள், ஆகியவற்றின் மூலம் மீன்களை பிடித்தனர். 



சிறுவர்-சிறுமிகள் கரையோரத்தில் துள்ளிக் குதித்த சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். பாரம்பரிய முறையில் ஏரியில் மீன் பிடிக்கும்போது சேற்றுக் குளியல் உடலுக்கு ஆரோக்கியம் என்பதாலும்,தண்ணீரில் உள்ள மீன் முட்டைகள் சேற்றில் அழுத்தப்படுவதால் மீண்டும் தண்ணீர் வரும்போது அந்த மீன்களின் முட்டைகள் பெரிந்து குஞ்சுகள் வளர்ச்சி அடையும் என்பதாலும் இந்த பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். மீன்பிடித் திருவிழாவின்போது கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மீன்களும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments