உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில், மரம் பாலகிருஷ்ணன் , நிர்வாகி ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் பொன்மலைப்பட்டியில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு கவுன்சிலர் கோ.ரமேஷ் கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்குதுடன், மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் பொதுமக்களிடம் "பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்" என்ற விழிப்புணர்வுக்காக துணிப்பை வழங்கப்பட்டதுடன் , பிளாஸ்டிக் எடுத்து வருவார்களிடம் பிளாஸ்டிக் வாங்கிக் கொண்டு துணிப்பை கொடுக்கப்பட்டது.
இந்த பூமியை அழிவிலிருந்து இயற்கையை மீட்டெடுக்க வேண்டியது, மனித குலத்தின் தலையாய கடமை. இதனை மையாகக் கொண்டு தான் "ஒரே ஒரு பூமி" என்ற வாசகம் இந்த ஆண்டின் உலக சுற்றுச் குழல் நாள் கோட்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்பாட்டை பொதுமக்களிடம் கொண்டு செல்லுவது என உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்க பண்பாளர் நரேஷ், வெங்கடேஷ், தமிழ்ச்செல்வன், சந்திரசேகர், விஜயகுமார், பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
0 Comments