திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அதை குறைக்கும் விதமாக ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது...
திருச்சி பால்பண்ணை பகுதிக்கு தஞ்சையில் ஒரு வாகனங்கள் நிற்கும் சிக்னலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது....
சில சமயங்களில் கடுமையான நெரிசல் களுக்கு இடையே மக்கள் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக் கொள்கின்றனர்.. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுவிக்க காவல்துறையினர் படாத பாடுபடுகின்றனர்.
இதற்கு காரணம் பொதுமக்கள் சரியான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது. தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் Free left உள்ளது. இதனை சிக்னல் போடும்போது அனைவரும் அடைத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.... இதற்கு தீர்வு காணும் விதமாக பால்பண்ணை சிக்னல்களிலிருந்து தஞ்சை பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் நிற்கும் இடம் வரையில் வேலிகள் அமைத்து இடது புறம் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு வகையில் செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் ..ஆகவே மாவட்ட நிர்வாகம் இதை விசாரித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமாறு ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்..
0 Comments