// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - டிரைவர் பலி.

திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - டிரைவர் பலி.

திருச்சி துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி தீரன் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சர்வீஸ் செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இன்று மாலை சர்வீஸ் முடிந்து மீண்டும் துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை க்கு கொண்டு செல்வதற்காக அரசு பஸ் டிரைவர் ரங்கநாதன் பஸ்சை ஒட்டிக்கொண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜி கார்னர் பகுதியில் வந்து கொண்டு இருந்த பொழுது பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. 


இந்த விபத்தில் பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் அரசு பஸ்சில் இருந்த போக்குவரத்துக் கழக அரசு  ஊழியர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.


 இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் விபத்தில் பலியான அரசு பஸ் டிரைவர் ரங்கநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்


 மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Post a Comment

0 Comments