அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி ஒற்றை தலைமை இருந்தால்தான் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டுவர முடியும்.
75 மொத்த மாவட்ட செயலாளர்களில் 2 பேர் தவிர மற்ற அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முழக்கம் எழுப்பினர் .எடப்பாடிக்கு ஆதரவு அலை வீசியது.
ஆனால் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த DGP க்கும், திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார்.
ஸ்டாலின், TTV தினகரன் , சசிகலாவை நம்பி ஓ.பன்னீர் செல்வம் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய பரஞ்ஜோதி ஓ.பன்னீர் செல்வம் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றார்.
0 Comments