// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மணல் கடத்திய வேன் பறிமுதல் தப்பியோடியவர் மீது வழக்கு

திருச்சியில் மணல் கடத்திய வேன் பறிமுதல் தப்பியோடியவர் மீது வழக்கு

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய  குற்றப்பிரிவு போலீஸ் விநாயகமூர்த்தி மற்றும் ஊர் காவல் படை வீரர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று அதிகாலை கொள்ளிடக் கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


 அப்போது கொள்ளிடக் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த வேனை நிறுத்தி  சோதனை செய்தனர். வேனில் எவ்வித அனுமதியும் இன்றி மணல் கடத்தப்படுவது தெரிய வந்தது.


 இதுகுறித்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ய முற்பட்ட பொழுது அவர்கள் அனைவரும் வேனில் இருந்து குதித்து அருகில் இருந்த முட்புதர்குள் புகுத்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சுமார் ஒன்றரை யூனிட் மணலுடன் வேனை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலூரை சேர்ந்த விஜி உள்பட சிலர் மீது வழக்கு பதிந்து தப்பியோடிய அனைவரையும் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments