NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சியின் 14ம் ஆண்டு துவக்கதினம்

SDPI கட்சியின் 14ம் ஆண்டு துவக்கதினம்

 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 14ம் ஆண்டு துவக்கதினம் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தலைமையகத்தில் மக்கள் சக்தியான SDPI கட்சியின்  கொடியை ஏற்றும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.இதில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


தெற்கு மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முஹம்மது அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.வடக்கு மாவட்ட பொது செயலாளர் நியாமத்துல்லா அவர்கள் எழுச்சி கோசம் எழுப்பினார்.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான்  பைஜி அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்கள். 


இதில் SDTU  மாநில செயலாளர் முஹம்மது ரபீக்,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக்,ஊடக அணி மண்டல பொறுப்பாளர் ரியாஸ் ,அணி நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments