BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் சிக்கிய கார் - 7 பேர் கைது

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் சிக்கிய கார் - 7 பேர் கைது

 திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது காரில் அரிவாள், கத்தி நாட்டு வெடிகுண்டுகளுடன் பயணம் செய்த 7 பேரை ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், காரையும் பறிமுதல், செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நவல்பட்டு போலீசார் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார்

வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.



அப்போது அந்த வழியாக வந்த ஒரு யுனோவா காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் பறந்து சென்றது. விரட்டி சென்ற போலீசார் எம்ஐஈடி பஸ்ஸ்டாப் அருகே காரை மடக்கி பிடித்தனர்.


 அந்த காரில்  7 பேர் இருந்துள்ளனர். மேலும் அந்த காரை சோதனையிட்ட போது காரில் 2 வீச்சஅருவாள், 2 வாள், ஒரு சூரி கத்தி, 2 நாட்டு வெடிகுண்டு இருந்தது தொிய வந்தது. 


இதனை தொடர்ந்து அவர்கள் 7பேரைகைது செய்து காரோடு ஆயுதங்களையும் நவல்பட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணை  செய்தபோது நவல்பட்டு போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் குளித்தலைமுதலி கவுண்டனூரை சேர்ந்தவர் குருநாதன் இவரது மகன் மணிகண்டன்(எ)குரு மணிகண்டன்(29), சோமரசம்பேட்டை வைரவேல்(36), கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராகவன் மகன் ராஜேஷ் (எ) தளவாய் ராஜேஷ்(45),

சோமரசம்பேட்டை தாராபுரத்தை சேர்ந்த பெரிய அண்ணன் மகன் வைரவேல் (36), அதவத்துார் மேலப்பேட்டைதுறை இராஜேந்திரன் மகன் குணசேகரன்(28), குளித்தலைகிழக்கு முதலில் கவுண்டனூர் சேர்ந்த மாரிமுத்து மகன் ரவி(21), பெருகமணி காந்திநகர் ராஜகோபால் மகன் தீனதயாளன்(29), பெட்டவாய்த்தலைகருப்பாயி அம்மன் கோவில் தெரு பரமசிவம் மகன் ராஜா(39) என்பதும் தொிய வந்தது. 


இதனை தொடர்ந்து 7 பேரையும் கைது செய்துநவல்பட்டு போலீசார் விசாரணை செய்து அவர்கள் தற்பாதுகாப்புக்காக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.


ஜூலை 1ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் ஏழு பேரையும் திருச்சி மத்திய சிறையில் நவல்பட்டு போலீசார் அடைத்தனர்.


இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments