இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை ஒவ்வொரு நகரில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி இந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூர் அரண்மனை வளாகத்தில் யோகா செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் திரு.மனிஷ் அகர்வால் அவர்களின் தலைமையில் யோகா ஆசிரியர் திரு செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பலர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றமும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
இதில் திருச்சி முதன்மை மாவட்ட நிதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாபு தலைமையில் யோகா பயிற்சியில் மாவட்ட அனைத்து நீதிபதிகளும் சார்பு-நீதிபதிகளும் உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட அனைவரும் பங்குகொண்டனர்
அதேபோல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகாசன தினத்தையொட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த யோகாசன நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்.
0 Comments