NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மாட்டுவண்டி மணல் அள்ளும் சங்கத்தினர் குவாரி அமைத்து தர மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மாட்டுவண்டி மணல் அள்ளும் சங்கத்தினர் குவாரி அமைத்து தர மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளும் தொழில் செய்து வருகின்றனர். ஏற்கனவே காவிரி ஆற்றில் பனையங்குறிச்சி மற்றும் கீழ முல்லைக்கொடி, கொள்ளிடம் ஆற்றில் மாதவப் பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி ஆகிய பகுதிகளில் குவாரிகள் அமைத்து மணல் அள்ளப்படும் நிலையில், மாதவப் பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி குவாரிகளுக்கு இன்னும் 6 மாத காலமே அனுமதி இருப்பதாலும், காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இருப்பதாலும் மணல் அள்ளும் மாட்டுவண்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,



,மாற்று இடத்தில் காவிரி ஆற்றின் தென்கரையில் வேங்கூர் மற்றும் முருங்கை பேட்டை, அதேபோல் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் மற்றும் அப்பாதுரை பகுதியில் மாட்டுவண்டிக்கென தனி குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் அள்ளும் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments