BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சியில் நடந்த சைக்கிள் ரிக்சாபோட்டி - இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு

திருச்சியில் நடந்த சைக்கிள் ரிக்சாபோட்டி - இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்சா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.காலப்போக்கில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் பெருக்கத்தினால் சைக்கிள் ரிக்சா தொழில் மிகவும் தமிழகத்தில் பெண்ணுக்கு தள்ளி அழிவு வரும் நிலையும் ஏற்பட்டு வந்தது


இந்நிலையில் சைக்கிள் ரிச்சா பிரபல வெளிநாடுகளில் பலவித மாடல்களில் தனித்துவ கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது ஆனால் தமிழகத்தில் சைக்கிள் ரிக்சா தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.



இந்நிலையில் சைக்கிள் ரிக்சா வெளிநாடுகளில் உள்ளது போல் நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என இளைஞர்களுக்கும் சைக்கிள் ரிச்சா ஓட்டுவதே தொழிலாக கொண்ட நபர்களுக்கும் முன்னோட்ட போட்டியாக திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ரிசர்ச் தலைவர் சிரின் கூறுகையில்:-


 நான்கு சக்கர வாகன பந்தயம் போல் ரிக்ஷா பந்தயம் இந்தியாவில் கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் தற்போது உபயோகிக்கக்கூடிய ரிக்சார்கள் 20  வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்திய பட்ட ரிச்சாக்கள் ஆகும் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் பார்க்கும் போது பலவித புதுவிதம் கூடிய ரிச்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக வெளிநாடுகளில்இளைஞர்களுக்காக ரிக்சாக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்கள் மட்டுமே ரிக்சாக்களை இயக்கி வருகின்றனர்.

இந்தியாவில் ரிக்சாக்கள் தயாரிக்கும் நிறுவனமும் மூடப்பட்டு வருகிறது.



ஜீரோ சதவீத கார்பன் புகையில்லாத வாகனங்கள் கூடிய ஒரு  விளையாட்டினை இந்திய இளைஞர்களுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ரிக்சாவால் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் எனவும் இந்த போட்டியினை அறிமுகப்படுத்தி உள்ளேம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments