BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** கோக்கோ ஸ்கேட்டிங் போட்டி திருச்சி அணி கோப்பையை கைப்பற்றியது

கோக்கோ ஸ்கேட்டிங் போட்டி திருச்சி அணி கோப்பையை கைப்பற்றியது

 தமிழ்நாடு மாநில அளவிலான 2-வது கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பகுதியில் உள்ள கிரீன் ஸ்கேட்டிங் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியை தமிழ்நாடு ஸ்கேட்ஸ் கோகோ அசோசியேஷன் தலைவர்  சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். துணை செயலாளர் நந்தகுமார், பொதுச்செயலாளர் பூஞ்சோலை மற்றும் பொருளாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கோகோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.


அண்டர் 8-வயது முதல் 19-வயது வரை உள்ள ஸ்கேட்டிங் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை திருச்சி கோகோ ஸ்கேட்டிங் அணி வெற்றி பெற்று கைப்பற்றியது. 2-வது இடத்தை மதுரை அணியும், 3-வது இடத்தை தர்மபுரி அணி கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் ஜோசப் நிக்சன் வழங்கினார். இவ்விழாவில் கோகோ ஸ்கேட்டிங் வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு கோகோ ஸ்கேட்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் பூஞ்சோலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 

 தமிழ்நாடு மாநில அளவிலான 2-வது கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்றது இந்த போட்டியில் 32அணிகள் பங்கேற்றது. இந்த கோகோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து அடுத்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள புனேவியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கோகோ ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கு பெறுவார்கள் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments