BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** வீட்டு மனைகள் கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு

வீட்டு மனைகள் கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு

 திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழரசூர் கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கிராமத்தில் அரசு மூலம் வீட்டுமனைகள் கேட்டு கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை ஆகவே மீண்டும் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்துவிட்டு மீண்டும் லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக 250க்கும் மேற்பட்ட பெண்கள் மனுவுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர் ...


இவர்கள் கூறுகையில் எங்கள் ஊரில் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றோம் இதில் அண்ணாநகரில் ஒரே வீட்டில் 3, 4,குடும்பங்கள் வசித்து வருகின்றோம் எங்களுக்கு தனியாக இடம் வாங்கி வீடு கட்டும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் அரசிடம் பலமுறை எங்கள் ஊர் அருகாமையில் பல ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதால் அந்த இடத்தில்  எங்களுக்கு வீடு கட்டி வசிக்கும் அளவிற்கு எங்களுக்கு வீட்டுமனைகள் கேட்டு மனு கொடுத்துள்ளோம் இன்று மாவட்ட உதவி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் பொழுது அவர் எங்களை உங்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுங்கள் விரைவில் உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் நாங்கள் தற்பொழுது லால்குடி வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்கள்

Post a Comment

0 Comments