// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அழைப்பு

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அழைப்பு

 தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது..  திருச்சி புறநகர் வடக்கு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுக்கு  புறநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அறிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத  திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.7.2022 (திங்கள் கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில்  நடைபெற உள்ளது.  

 இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அழைப்பு விடுத்துள்ளார்.


Post a Comment

0 Comments