// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21ஆம் ஆண்டு நினைவு தினம் - முதியோர் இல்லத்தில் அன்னதானம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21ஆம் ஆண்டு நினைவு தினம் - முதியோர் இல்லத்தில் அன்னதானம்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது."

பராசக்தி" படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று அவரது 21- வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சினிமாத்துறையினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உலகம் முழுவதும் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்து வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள உதவும் மனங்கள் அறக்கட்டளை நடத்தும் முதியோர் இல்லத்தில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.சி பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சண்முகம், பொருளாளர் ராமன், திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக  மறைந்த தமிழக திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவாஜி கணேசன் அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


அதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் உள்ள 70-முதியோர்களுக்கு பாய் விரிப்பான் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் நிர்வாகிகள் பாலன், ஓய்வு பெற்ற எஸ்ஐ மதி, கிரி, கோண ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments