BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம் - எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்பு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம் - எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்பு

 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி, மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மதிவாணன், மண்டலம் 2-ன் தலைவர் ஜெயநிர்மலா, வேளாண்மை துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

எனவே காவிரி பாலத்தில் இருந்து அண்ணா சிலை, தலைமை தபால் நிலையம மேல்மட்ட சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் நெருக்கடி, குடிநீர் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments