BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சியில் மூன்று நாட்கள் ஓவிய கண்காட்சி

திருச்சியில் மூன்று நாட்கள் ஓவிய கண்காட்சி

 சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் ஓவியக் கண்காட்சி என்னும் ஓவிய கண்காட்சி திருச்சியில் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது..

 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓவியக் கண்காட்சியினை துவங்கி வைக்கிறார்.

     


         

டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில் ஓவியக் கண்காட்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா  காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரைஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள்  நடைபெறுகிறது.

 சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில்

 முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள்  ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார்கள். அதில் ஒரு ஓவியம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஓவியம் ஆகும். சுதந்திரப் போராட்ட வீரர்களில் வேலு நாச்சியார், பகத்சிங், திருப்பூர் குமரன், கட்டபொம்மன்,


வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை, திப்புசுல்தான், தீரன் சின்னமலை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுப்ரமணிய பாரதியார், மருதநாயக பிள்ளை, ஊமைத்துறை, சித்தரஞ்சன் தாஸ், பண்டிட் ஜவஹர்லால் நேரு, ராணி லட்சுமி பாய், மாதாங்கிணி ஹஜ்ரா, குன்வர் சிங், அஞ்சலை அம்மாள், புலித் தேவர், அழகு முத்துக்கோன், மருதுபாண்டியர், பால கங்கார திலக், மங்கள் பாண்டே, சரோஜினி நாயுடு, விபின் சந்திர பால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாலா லஜபதி ராய், சர்தார் வல்லபாய் படேல், நானா சாகேப் உள்ளிட்டோர் ஓவியத்துடன் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை 75 ஓவியங்களை ஒரே ஓவியமாக காட்சிப்படுத்துகிறார்கள்



இவ்வாறாக  140 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

 ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை,  ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்களை

பல்வேறு வகையான எண்ணெய் ஓவியம் (Oil painting) வண்ணக்கோல் (Pastel painting) ,

 செயற்கை வண்ணக் கூழ்மங்கள் 

(Acrylic painting),

 நீர்வர்ண ஓவியம்

 (Watercolor painting),

மை ஓவியங்கள்

 (Ink Painting),

பூச்சு ஓவியங்கள் (Enamel painting)

என வண்ண

கலவை பகுதியில்  கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர். அது  படைப்பாளியின்  அணுகுமுறையினை கருத்தியலை எடுத்துரைக்கிறது.


பரிசளிப்பு விழாவில் தேசிய விருது பெற்ற ஓவியர் விசுவம் ,பத்மஸ்ரீ தாமோதரன், ஓவியர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளிக்கிறார்கள்.


ஓவியக் கண்காட்சி ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம்  செய்துள்ளனர்.


 பொதுமக்கள் அனைவரும் ஓவியக் கண்காட்சியை கண்டு களிக்கலாம். அனுமதி இலவசம்.

Post a Comment

0 Comments