// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தொடர்ந்து ஏற்படும் விபத்து - மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

தொடர்ந்து ஏற்படும் விபத்து - மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

 திருச்சி ஜெயில் கார்னர் பகுதியிலுள்ள பஸ் நிறுத்ததை மாற்ற வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை


திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர் பொன்மலைப்பட்டி செல்லும்  ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் கிளம்பும் வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபடுகிறது.

 
பஸ்கள் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிடுவதாலும், ஏறுவதாலும் நெரிசல் தொடர்கிறது. 


மேலும்  பஸ்சை ஒட்டியே வாகனங்கள் வருவதால் பொன்மலைப்பட்டி இருந்து வரும் நபருக்கும் தெரிவது இல்லை,விபத்துகள் தினத்தோறும் நடக்கிறது.


அதுப்போல் ஏர்போர்ட் பகுதி இருந்து வரும் பஸ்கள் ரோடு கடக்கும்  இடத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிடுவதாலும், ஏறுவதாலும் நெரிசல் தொடர்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே  பாதிக்கப்படுகின்றனர்


இந்த பஸ் நிறுத்தத்தை சற்று தள்ளி  ஜெயில்கார்னர் ரோடு கடந்து தெற்கு பகுதியில் அமைக்கலாம். இதனால், பொன்மலைப்பபட்டி வழியாக செல்லும் வாகனங்கள் நெரிசலின்றி, விபத்துகள் இல்லாமலும் செல்லும்.

தொடர்ந்து விபத்துகள் நடக்கும் பகுதியான திருச்சியிருந்து புதுக்கோட்டை செல்லும் பஸ்களும், புதுக்கோட்டையிருத்து திருச்சி வரும் பஸ்களும்  பொன்மலைப்பட்டி  ரோடு பகுதிகளில் பஸ்களை நிறுத்தமால் தள்ளி பஸ்கள் நிறுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

Post a Comment

0 Comments