// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை - சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக கூட்டத்தில் முடிவு

எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை - சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக கூட்டத்தில் முடிவு

 திருச்சிக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென, அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருச்சியில் ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகா் அவைத்தலைவா் மலைக்கோட்டை வி. அய்யப்பன் தலைமை வகித்தாா்.


திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி, புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமாா் முன்னிலை வகித்து உரையாற்றினா். மாவட்ட அவைத்தலைவா் பிரின்ஸ் தங்கவேல் வரவேற்றாா்.

மாநில அமைப்புச் செயலரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி. ரத்தினவேல், எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா் ஜெ. சீனிவாசன், மாநகா் மாவட்ட மாணவரணிச் செயலா் சி. காா்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினா். நிறைவில், தெற்கு மாவட்ட அவைத்தலைவா் எம். அருணகிரி நன்றி கூறினாா்.


ஆகஸ்ட் 28- ஆம் தேதி திருச்சி வருகைதரும் முன்னாள்

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, அதிமுகவை அவரது தலைமையில் கீழ் ஒன்றிணைத்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலரப் பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments