NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தமுமுக - மமக மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்

தமுமுக - மமக மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்  மணியளவில் பாலக்கரை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில பொருளாளர் N.ஷபியுல்லாஹ் கான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.


சமூக நீதி மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் வழ. நூர்தீன், மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம், ஹூமாயூன் கபீர், இப்ராம்ஷா, இம்ரான்,   மணவை அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மமக வின் கழக அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு கிளை, ஊராட்சி கிளை, பகுதி, பேரூர், ஒன்றியம், நகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் உள்ள பொறுப்புகளுக்கு அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த போதைக்கு வஸ்துகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமுமுக வின் 28ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 25  அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.



இக் கூட்டத்தில் குளத்தூர் ஹுமாயூன், அப்பீஸ் கான், அப்துல் ரஜாக், தென்னூர் சதாம் உள்ளிட்ட வார்டு பகுதி பேரூர் நகர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments