BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத லால்குடி சட்டமன்ற உறுப்பினர்

உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத லால்குடி சட்டமன்ற உறுப்பினர்

நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக பம்பர் வைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பம்பர் வைத்திருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அதற்குண்டான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதமாக ஈடுபடுவர். ஆனால்,  திருச்சியில் வலம் வரும் ஒரு வாகனத்தின் பம்பர் மட்டும் ஏனோ,  மாவட்ட காவல் துறையினர் கண்ணுக்கு புலப்படாதது ஆச்சர்யமே. 


இதற்கு காரணம் அந்த வாகனத்துக்கு சொந்தக்காரர் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் சௌந்தர பாண்டியன். எம்எல்ஏ பதவியில் இருக்கும் அவர் தான் நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடித்து பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.  ஆனால் 4வது முறை எம்எல்ஏவாக உள்ள  சௌந்தரபாண்டியனோ  கோர்ட் என்னை என்ன செய்து விட முடியும் என்று கேட்கும் ரீதியாக ,  பம்பரை மாட்டிக் கொண்டு, அரசு விழா, அமைச்சர் பல்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 


காரில் அமர்ந்து செல்லும் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு சல்யூட் அடிக்கும் போலீசாரின் கண்ணில்  ஏனோ இந்த பம்பர் தெரிய  மறுக்கிறது. இதனால் கார் மீது நடவடிக்கை ஏதும் இதுவரை இல்லை. சாமானியன் என்றால் பாயும் சட்டம், சட்டமன்ற உறுப்பினர் என்றால் தயங்கி நிற்பது ஏன்? என பொதுமக்கள் கேட்கும் கேள்வி போலீசார்  காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை போலும்......

Post a Comment

0 Comments